ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6,654 பேருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஒரேநாளில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6,654 பேருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஒரேநாளில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6,654 பேருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஒரேநாளில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் 739 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

  மாநிலம் முழுவதும் 1 லட்சத்து மூவாயிரத்து 692 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 739 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் 8 பேர் மரணம் அடைந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

  நோய் தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 614 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து இரண்டாயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 654 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே, மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 294 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கோவையில் 78 பேருக்கும், செங்கல்பட்டில் 64 பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 34 பேரும், திருவள்ளூரில் 33 பேரும், காஞ்சிபுரத்தில் 31 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

  இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  Read More : திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், அவங்க ராசி அப்படி - கடம்பூர் ராஜூ

  இதேபோல, கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளியூரிலிருந்து நகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Must Read : தஞ்சையில் அண்ணா, கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

  புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

  இந்நிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. டெல்லியில், நேற்று முன்தினம் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று 923-ஆக அதிகரித்துள்ளது.

  Read More : மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்.. கோவை விமானநிலையத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்

  இதேபோல, மும்பையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 333 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று 2 ஆயிரத்து 510-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் 85 பேருக்கும், ராஜஸ்தானில் 22 பேருக்கும், குஜராத்தில் 19 பேருக்கும், ஆந்திராவில் 10 பேருக்கும் பஞ்சாப்பில் முதல்முறையாக ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona, Covid-19, Omicron