• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக மின் வாரியத்தின் கடன்சுமை 30 சதவீதம் வரை அதிகரிப்பு..

தமிழக மின் வாரியத்தின் கடன்சுமை 30 சதவீதம் வரை அதிகரிப்பு..

கோப்புப்படம்

கோப்புப்படம்

மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான ஊரடங்கு காலத்தில் தமிழக மின் வாரியத்தின் கடன்சுமை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழக மின்வாரியம் கடந்த 2017-18 நிதியாண்டில், ஐந்தாவது நிதிக்குழு பரிந்துரைகளின்படி ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியது முதல் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக, மின்வாரியத்தின் கடன் மேலும் அதிகரித்து வருகிறது.

    Also read: குடியாத்தம்: பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி..

    குறிப்பாக கொரோனா காலத்தில் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. 2020 மார்ச் மாதத்தில் தமிழக மின்வாரியத்தின் கடன்சுமை 14,362 கோடி ரூபாயாக இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில், 15,881 கோடி ரூபாயாகவும் மே மாதத்தில் 16,983 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.



    இதுபோல் ஜூன் மாதத்தில் கடன்தொகை மேலும் அதிகரித்து 18,091 கோடி ரூபாயாகவும், ஜூலையில் கடன்தொகை உயர்வு விகிதம் சற்றே குறைந்து 18,983 கோடியாக கடன்தொகை அதிகரித்தது. எனினும் நான்கு மாதங்களில் கடன் சுமை 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: