பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம் விற்பனை அதிகரிப்பு: நிதியமைச்சர் பிடிஆர்

பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் விலை மீதான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதன் காரணமாக அதன் பலன் நேரடியாக மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி 2021 - 2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14 ஆம் தேதி வேளாண் துறைக்கான முதல் முறையாக தனியான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரையை வழங்கி பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில வரியால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி தகவல் கிடைப்பதில் கடினம் உள்ளதாகவும் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் கிடைக்ககூடிய பலன் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 13 ஆம் தேதி தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை 9 லட்சத்து 18 ஆயிரத்து 800 கிலோ லிட்டராக இருந்தது.

Also read: புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட விவகாரம் : ஓ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இ.பரந்தாமன்

அது 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 500 கிலோ லிட்டராக விற்பனை அதிகரித்தது. தற்போது 11 லட்சத்து 28 ஆயிரமாக கிலோ லிட்டராக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பயணம்  மேற்கொண்டு பணிகளைச் செய்கின்றனர். இதனால் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் நேரடியாக பயணை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மேலும் மத்திய மாநிலங்களுக்கிடையே போடக்கூடிய வருமான வரித்துறை வரி, உள்ளிட்ட வரிகளில் தகவல்களுக்காக தரவுகள் தேவைப்படுகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலம் நாள் ஒன்றுக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது, இதே நிலை நீடித்தால் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு ஒன்றுக்கு 3.55 கோடி வருமானம் கிடைக்கும், ஆண்டுக்கு 1200 கோடி ஒன்றிய அரசுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்  என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடம் முன்னாள் நிதியமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டியுமான பேராசிரியர் க.அன்பழகனின் பெயரால் அழைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
Published by:Esakki Raja
First published: