முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பின் அளவு அதிகரிப்பு..11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பின் அளவு அதிகரிப்பு..11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

Mettur Dam | மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பின் அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 86,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 32,000 கன அடி நீரும் என மொத்தம் 1,18,000கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக நேற்று காலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக முதல்கட்டமாக 50 ,000 கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரி நீரின் திறப்பு ஒரு லட்சத்து 23,000 கன அடியில் இருந்து 1,23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 15,000 கன அடி நீரும், சுரங்க மின் நிலையம் வழியாக 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Mettur Dam