ஜுன் மாதத்தில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - சென்னை மாநகராட்சி ஆய்வு

கடந்தாண்டை விட இந்தாண்டு ஜுன் மாதத்தில் சென்னையில் நடந்த மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கான காரணத்தை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்கிறது.

ஜுன் மாதத்தில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - சென்னை மாநகராட்சி ஆய்வு
மாதிரிப் படம்
  • Share this:
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை 17,326 பேர் இறந்துள்ளனர். அதேவேளையில் 2019ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 16,602 பேர் இறந்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும், இறப்புகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை.

2019ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களின் இறப்பு எண்ணிக்கை விட, 2020ம் ஆண்டு நடந்த இறப்பு எண்ணிக்கையை குறைவாகவே இருந்தது. இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 4,216 இறப்புகள் பாதிவான நிலையில், இதில் 21 இறப்புகள் மட்டுமே கொரோனா தொற்றால் ஏற்பட்டது. மே மாதத்தில் நடந்த 5,218 இறப்புகளில், 297 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், ஜுன் மாதத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜுன் மாதத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த 1,028 பேர் உட்பட 7,168 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1,938 மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது.


அதேவேளையில், 2019ம் ஆண்டு ஏப்ரலில் 5,552 ஆகவும், மே மாதத்தில் 6,544 ஆகவும், ஜுன் மாதத்தில் இறப்பு எண்ணிக்கை 5,230 ஆகவும் பதிவாகி இருந்தது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஜுன் மாதத்தில் அதிகமாக உள்ளது.

ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகள் எண்ணிக்கை குறைந்திருந்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தது. அதேபோல், ஜுன் மாதத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு இருந்த நிலையிலும், இம்மாதத்தில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி ஜூன் மாதம் சென்னையில் இறப்புகளின் எண்ணிக்கை  அதிகரித்தது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஜூன் மாதத்தில் நிகழ்ந்த கொரோனா மற்றும் மற்ற மரணங்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய உள்ளது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading