தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்ட நிலையில் இன்று கல்வி நிறுவனங்களில் சிறப்பு கொரனோ தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று, குழு பரவல் கண்டறியப்பட்டதன் எதிரொலியாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் அனைத்து பல்கலைக்கழகங்கள் , அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திட தகுதியான நபர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் கூறியதாவது : தினமும் சென்னையில் இரண்டு அல்லது மூன்று clusterகள் உருவாகின்றன. குடியிருப்பு பகுதிகளில் ஒரே தெருவில் cluster உருவாகிறது.
எனவே பரிசோதனையை அதிகரித்துள்ளோம். இது வரை தினமும் சராசரியாக 11,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படும். தற்போது பதினைந்தாயிரம் மாதிரிகளை பரிசோதிக்கிறோம். பரிசோதனை செய்ய ஆரம்பித்த பிறகு, தொற்று கண்டறிவது அதிகமாகியுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் 9000 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட தடுப்பூசி செலுத்தத் தவறிய ஏராளமான மாணவர்கள் காலை முதல் தடுப்பு ஊசி செலுத்தினர். அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.