தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... முதலிடத்தில் கலாநிதிமாறன்..!

தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... முதலிடத்தில் கலாநிதிமாறன்..!
கலாநிதி மாறன்
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 10:07 PM IST
  • Share this:
தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் ZOHO secure, போத்தீஸ், மற்றும் ஹட்சன் ஆக்ரோ நிறுவனங்கள் புதிதாக இணைந்துள்ளன.

HURUN REPORT INDIA AND IIFL wealth நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சன் நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறன் 19 ஆயிரத்து 100 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கலாநிதி மாறன் 43- வது இடத்தை பிடித்துள்ளார்.

ZOHO secure நிறுவனத்தின் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 7,100 கோடி ரூபாய் மதிப்புடன், போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்திய அளவில் 125 -வது இடத்தில் உள்ளார்.


ஹாட்சன் அக்ரோ PRODUCTS- ன் RG சந்திரமோகன் 7 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5- வது இடத்தை பிடித்துள்ளார். கவின் கேரின் CK ரங்கநாதன் 6- வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5,300 கோடியாக உள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 62 சதவிதிதத்தினர் அதாவது 34 பேர் சென்னையில் வசிப்பவர்கள். கோவையிலிருந்து 12 பேரும் திருப்பூரிலிருந்து 4 பேரும் சேலத்திலிருந்து 3 பேரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலில் 7 பெண்கள் உள்பட 16 பேர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை விட தமிழகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜவுளித்துறையை சேர்ந்த 16 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், சராசரி சொத்து மதிப்பில் 11 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்