வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை

வி.வி மினரல்ஸ் நிறுவனம்

இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

  தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வி.வி.மினரல்ஸ் குழுமம், தாது மணல் விற்பனை, சரக்கு போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை திசையன்விளையில் உள்ள தலைமை அலுவலகம், சென்னை திருவான்மியூரில் உள்ள அலுவலகம், நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்கள் மட்டுமல்லாது, ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரான்ஸ்ஹால்ட் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

  இதில் 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமானவரி செலுத்தவில்லை என புகார் வந்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Also see...

  Published by:Vaijayanthi S
  First published: