பால் தினகரனிடம் வெளிநாடுகளில் செய்யப்பட்ட ரூ.100 கோடி முதலீடு குறித்து விசாரணை- 3 நாள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவு

Youtube Video

வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக பால் தினகரனிடம் தொடர் விசாரணை நடைபெறும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 • Share this:
  சென்னை, கோவை உள்ளிட்ட கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் 3 தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர். மூன்று தினங்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று காலையில் முடிவுக்கு வந்தது. இந்தச் சோதனையின்போது கோவை காருண்யா பல்கலைக்கழகத்திலுள்ள பால் தினகரனுக்கு சொந்தமான வீட்டிலிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பால் தினகரனிடம் ஆர்.பி.ஐ அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள அமெரிக்கா, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் என்.ஆர்.ஐ பிரிவுகளில் கீழ் வருவதால் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பாக அவர்களிடம் முழுமையான தகவலைப் பெற முடியாத சூழல் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்த 100 கோடி ரூபாய் என்பது இந்தியாவில் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து வருமான வரித்துறை தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறது. பால் தினகரன் அவருக்கு வந்த வருமானம் முழுவதையும் கணக்கில் காட்டிவருகிறார். அவருக்கு வந்த கோடிக்கணக்கான நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன் பரிவர்த்தனையாக வாங்கப்பட்டுள்ளது என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

  அதனால், அவரிடமிருந்து எந்தப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட 5 கிலோ தங்கத்துக்கு மட்டும் வரி கட்டியுள்ளாரா என்று விசாரணை செய்யப்படவுள்ளது. வருமான வரித்துறை சோதனை முடிந்துவிட்ட போதும் விசாரணை தொடரும் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: