சிஎஸ்கே அணியின் பங்குதாரரின் பீர் தொழிற்சாலையில் வருமானவரி துறையினர் சோதனை!

எஸ்.என்.ஜே நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயமுருகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.

Web Desk | news18
Updated: August 6, 2019, 2:14 PM IST
சிஎஸ்கே அணியின் பங்குதாரரின் பீர் தொழிற்சாலையில் வருமானவரி துறையினர் சோதனை!
எஸ்.என்.ஜே நிறுவனம்
Web Desk | news18
Updated: August 6, 2019, 2:14 PM IST
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை விநியோகிக்கும் தனியார் பீர் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நந்தனத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.என்.ஜே நிறுவனம் பீர் தயாரித்தல், ஹோட்டல், சினிமா தயாரிப்பு, சர்க்கரை ஆலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயமுருகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.


இந்நிலையில், ஜெயமுருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தவில்லை என்று எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி, தியாகராய நகரில் உள்ள உணவகங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கோவா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் 130 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெயமுருகனிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. எஸ்.என்.ஜே நிறுவனத்திற்கு சொந்தமான பீர் தொழிற்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு பீர் பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...