ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷனுக்கு உணவுப் பொருள் விநியோகிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

ரேஷனுக்கு உணவுப் பொருள் விநியோகிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வருவான வரி சோதனை

வருவான வரி சோதனை

சென்னை மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகித்து வரும் 5 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அரசுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, சென்னை மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  இதேபோன்று ஹீரா டிரேட்ரஸ், பெஸ்ட் டால் மில், இண்டகிரேட் சர்வீஸ் புரவைடர் என ஐந்து நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

  இதையும் படிங்க: உஷார்.! FIFA உலகக்கோப்பை கால்பந்தை பார்க்க 50ஜிபி இலவச டேட்டாவா? எச்சரிக்கும் போலீஸ்

  தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பொருட்கள்  கடந்த ஆண்டு இந்த நிறுவனங்கள் சார்பாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது விநியோகத் திட்டத்திற்கு பொருட்களை விநியோகம் செய்யக்கூடிய இந்த நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Income Tax raid, Ration