Home /News /tamil-nadu /

அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. ரூ.13 கோடி ரொக்கம் பறிமுதல்

அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. ரூ.13 கோடி ரொக்கம் பறிமுதல்

அன்புசெழியன்

அன்புசெழியன்

திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோர் தொடர்பொ

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 13 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அன்புச் செழியன், பல்வேறு படங்களுக்கு பைனான்சும் செய்து வருகிறார். இந்நிலையில், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீடு, தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகம் என சென்னையில் மட்டும் 10 இடங்களில், காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில், புரசைவாக்கத்தில் உள்ள அன்புச் செழியனுக்கு நெருக்கமானவரின் வீட்டில் இருந்து, 13 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று, மதுரை மேலமாசி வீதியில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான அலுவலகம், கீரைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் என, மதுரையில் மட்டும் அன்புச்செழியன் தொடர்புடைய 30 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பல தயாரிப்பு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகவும், சினிமாவில் கருப்பு பண முதலீடு அதிகரித்ததன் காரணமாகவும், வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அலுவலகத்திலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தியாகராய நகரின் பிரகாசம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், காலை 9 மணி முதல் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை

    இதேபோன்று திரைப்பட தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவின் தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்திலும், தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள அலுவலகத்திலும் காலை 9 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேகட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள, திரைப்பட தயாரிப்பாளரான, ஞானவேல் ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Anbuchezhian, Income Tax raid

    அடுத்த செய்தி