தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் தொடரும் ரெய்டு

தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் தொடரும் ரெய்டு
அரசு அலுவலகங்களில் ரெய்டு
  • News18
  • Last Updated: November 3, 2018, 9:27 AM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனை நேற்றும் நீடித்தது. மதுரை மாநகராட்சி பொறியாளர் அறையிருந்து கணக்கில் வராத ₹2,50,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் 24 அலுவலகங்களில் நடத்திய சோதனையின் நிறைவில் கணக்கில் வராத 44,30,000 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்றும் பல அரசு அலுவலகங்களில் சோதனை நீடித்தது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது கணக்கில் வராத 2,29,0400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காவல் நிலைய ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 110 பட்டாசு பெட்டிகள், 120 செட் ஆடைகளும் கைப்பற்றப்பட்டன.


தேனியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற 3 மணி நேர சோதனையின் நிறைவில் கணக்கில் காட்டப்படாத 80,0200 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதேபோல, மதுரை மாநகராட்சியின் நகர பொறியாளர் அரசு என்பவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2,51,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Also see...
First published: November 3, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading