பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
சீன மொபைல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை கண்டறிந்த அதிகாரிகள் அதற்கு ஏற்றுமதி இறக்குமதி செய்து வந்த சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சீன நிறுவனமான ஷியோமி நிறுவனம் ஓப்போ, ரெட்மி, பிளாக்பெர்ரி என பல்வேறு பெயர்களில் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தை கொடிகட்டி பறக்கவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவில் வருமானத்தை மறைத்து அதிக அளவில் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், அதேபோல மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்க கூடிய அலுவலகங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை ஆரம்பித்த இந்த சோதனையானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read: ஆண்டிப்பட்டி நர்சுடன் உல்லாசம்.. கொலை.. நகையுடன் எஸ்கேப்.. சிக்கிய கள்ளக்காதலன் தற்கொலை
இந்த நிலையில் திரைப்பட நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவுக்குச் சொந்தமான அடையாறு கஸ்தூரி பாய் நகரில் அமைந்துள்ள அவரது வீடு, மைலாப்பூர் மற்றும் மண்ணடியில் உள்ள கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற சரக்கு ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்போடு வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் மூலம் ஜியோமி தயாரிப்பு மொபைல்களான ரெட்மி, பிளாக்பெர்ரி, ஓப்போ உள்ளிட்ட மொபைல் போன்கள் மற்றும் மொபைல் போன் உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்து வருகிறார். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான வருமானத்தை அவர் மறைத்திருப்பதும் அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் வருமானவரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read: 10-நாள் திட்டம்.. கழுத்தில் கிடந்த தங்க ருத்ராட்சம் - சிங்க முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி
நடைபெற்று வரும் இந்த சோதனை முடிவில் தான் நாடு முழுவதும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் எவ்வளவு வரிஏய்ப்பு செய்துள்ளனர், எவ்வளவு வருமானம் மறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வரும் பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Income tax, Income Tax raid, IT Raid