ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் கடைகளில் வருமானவரி சோதனை

சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் கடைகளில் வருமானவரி சோதனை

சூப்பர் சரவணா ஸ்டோர்

சூப்பர் சரவணா ஸ்டோர்

சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, அப்பணத்தை தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை, மதுரை, கோவை நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வத்திரனம் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான சரவணா ஸ்டோர், தற்போது சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர் என்ற பெயரில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் உள்ளன.

இரண்டு நிறுவனங்களும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, அப்பணத்தை தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் காலை 8 முப்பது மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை தியகாராய நகர், மதுரையில் உள்ள சரவணா செல்வா ரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

Must Read : ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IT Raid, Saravana stores