மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரி சோதனை

மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரி சோதனை

சபரீசன்-மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாரை - மருமகன் சபரீசன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கார்த்திக் மோகன் மற்றும் பாலா ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. அவர் தன் கணவர் சபரீசனோடு சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

  ஸ்டாலின் மகள் செந்தாமரை


  அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறக்கும்படைகள் அமைத்து தேர்தல் ஆணையத்தினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல வருமான வரித்துறையினரும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

  வருமானவரித்துறை சோதனை


  Must Read : கரூரில் நள்ளிரவில் திமுக - அதிமுகவினர் மோதல் : 10 க்கும் மேற்பட்டோர் காயம்

   

  இந்நிலையில், இந்த வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: