முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

எம்.ஜி.எம். நிறுவனத்தில் ஐடி ரெய்டு

எம்.ஜி.எம். நிறுவனத்தில் ஐடி ரெய்டு

IT Raid : எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எம்.ஜி.எம். குழுமத்திற்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை, திருநெல்வேலி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.எம். தலைமை அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக வந்துள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் சென்டர் என்ற பெயரிலான தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் ஓட்டல், ரிசார்ட் மற்றும் தீம்பார்க் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இதேபோல, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அமைந்துள்ள எம்ஜிஎம் நட்சத்திர சொகுசு விடுதியில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபானத் தொழிற்சாலையில் 4 காரிகளில் வந்த சுமார் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்

எம்.ஜி.எம். நிறுவனம் தீம்பார்க், மதுபான உற்பத்தி, ஹோட்டல் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் பிரபல நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IT Raid