திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை

எ.வ.வேலு

முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 • Share this:
  முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை, எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடைபெற்று வருகின்றது. அதேபோல, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது.

  இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுள்ள மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், அங்கே மு.க.ஸ்டாலின் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன், கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திலும் இந்த சோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  வாக்காளர்களுக்கு பணப் பட்டுவடா நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகின்றது. தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடப்பதால், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்