• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேகர் ரெட்டி விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சேகர் ரெட்டி விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி

அதிமுகவில் இருந்து பிரிந்து, தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • Share this:
    சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த வகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்து தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    காட்பாடியைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. தொடக்க காலத்தில் சிறிய கான்ட்ராக்டராக இருந்த சேகர் ரெட்டிக்கு அரசியல் தொடர்புகள் விரிவடைந்ததால் பெரிய கான்ட்ராக்ட்கள் கிடைத்தன. மணல் கான்ட்ராக்ட்டும் இவரிடம் கை மாறின. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைதுசெய்தது.

    இந்நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அமலாகத்துறை சட்ட விரோத பண பரிமாற்றத்தின் கீழ் மூன்று வழக்குகளையும், சிபிஐ மூன்று வழக்குகளையும் பதிவு செய்தன. இதைத்தொடர்ந்து அப்போது தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Must Read : சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?

    கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமாக அறியப்பட்டவர். சேகர் ரெட்டியுன் ஓ.பன்னீர்செல்வம் மொட்டை அடித்த கோலத்தில் எடுத்துக் கொண்ட படம், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களல் பகிரப்பட்டு பிரபலமானது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: