முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகளுக்கு பிடிவாரண்ட்!

வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகளுக்கு பிடிவாரண்ட்!

மு.க.அழகிரி (கோப்புப் படம்)

மு.க.அழகிரி (கோப்புப் படம்)

தற்போது அஞ்சுகச் செல்வி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

  • Last Updated :

முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி ஆறு ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததையடுத்து அவருக்கு எதிராக வருமான வரி துறை வழக்கு தொடர்ந்தது.

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மலர் மதி முன்பு விசாரணைக்கு வந்தது.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி இன்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார்.

மேலும் பார்க்க: 

top videos

    First published:

    Tags: MK Azhagiri