எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை!

எஸ்.என்.ஜே நிறுவனத்திற்கு சொந்தமான காரில் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

news18
Updated: August 7, 2019, 12:02 PM IST
எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை!
எஸ்.என்.ஜே. நிறுவனம்
news18
Updated: August 7, 2019, 12:02 PM IST
எஸ்.என்.ஜே மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நந்தனத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.என்.ஜே நிறுவனம் மதுபானம், பீர் தயாரித்தல், சினிமா தயாரிப்பு, சர்க்கரை ஆலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயமுருகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார். ஜெயமுருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தவில்லை என்று எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 4 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த பணத்திற்கு உரிய கணக்கு இல்லாததால் அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...