எல்.முருகன் போட்டியிடும் தொகுதியில் தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

Youtube Video

திருப்பூர், தாராபுரத்தில் தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனையடுத்து, தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ம.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னியப்பா நகர் பகுதியிலுள்ள தி.மு.க நகரச் செயலாளர் தனசேகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கவின் வீட்டில் பணப் பரிமாற்றம் அதிகமாக இருப்பதாக வருமான வரித்துறை அதிகமாக இருப்பதாக தகவல் வந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கவினுக்குச் சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

  திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு அனிதா டெக்ஸ்கோர்ட் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம்தான் தமிழக அரசின் மகப்பேறு திட்டம், பள்ளிக் கூட பை ஆகியவற்றை ஒப்பந்தம் எடுத்து செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகவும் இருந்துவருகிறார். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. வரிஏய்ப்பு தொடர்பாக புகார் வந்ததால் சோதனை செய்வதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல, சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: