• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பச்சையப்பாஸ் சில்க்ஸ், எஸ்கேபி நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு..

பச்சையப்பாஸ் சில்க்ஸ், எஸ்கேபி நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் மற்றும் எஸ்.கே.பி. நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 250 கோடி ரூபாய்க்கான வருவாய் கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
    காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் மற்றும் அங்குள்ள எஸ்.கே.பி. நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அக்டோபர் 5ம் தேதி சோதனை நடத்தினர். நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், குடோன்கள் ஆகியவைச் சேர்த்து சென்னை, வேலூர், காஞ்சி என மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவனத்தில் 44 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

    9.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 100 கோடி ரூபாய் வருவாய்க்கு கணக்கு காட்டாததும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், எஸ்.கே.பி. நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1 கோடியே 35 லட்ச ரூபாய், ஏழரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கணக்கில் வராத 150 கோடி ரூபாய்க்கான வருவாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தை பதிவு செய்யாமலேயே 400 கோடி ரூபாய் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: