யார் ஆட்சியில் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மு.க.ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

மின் கட்டணம் செலுத்துவதற்கான 419 கோடி ரூபாய் கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கையில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் முந்தைய மாத கட்டணத்தை செலுத்தலாம் அல்லது மெபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்தோம். ஆனால், திமு ஆட்சியில் கடந்தாண்டு அதே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் பாதிக்கபப்ட்டதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில் மின் கட்டணங்களை மக்கள் செலுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் கட்டணம், கடந்தாண்டு கட்டணம், மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்புவது என மூன்று வாய்ப்புகளை பயன்படுத்தி மொத்தம் 14.69 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 2020 ஜுலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 3023 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை - 789 கோடியாகும். அதே, 2021 ஜுலை மாதம் மொத்தம் மின் நுகர்வு -  4494 மில்லியன் யூனிட். கடந்தாண்டை விட 1471 மில்லியன் யூனிட் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 48 சதவிகம் பயன்பாடு உயர்ந்திருந்தாலும், வசூலிக்கப்பட்ட தொகை 869  கோடி மட்டுமே ஆகும். கடந்தாண்டை விட 48 சதவிகதம் பயன்பாடு அதிகரித்திருந்த போதும், 10 சதவிதகம், அதாவது 80 கோடி தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Also Read : பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!

அதேபோல், 2020 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு – 3025 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை – 751 கோடி ஆகும்.  2021 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு – 4012 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை – 789 கோடி ஆகும். 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 987 மில்லியன் யூனிட், அதாவது 32 சதவிகித அதிக பயன்பாடு இருந்தாலும், 22 கோடி மட்டும் தான் கூடுதல் கட்டணம், அதாவது 3 சதவிகிதம் தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

Also Read : எடப்பாடி பழனிசாமிக்கு சேலஞ்ச் விட்ட துரைமுருகன்... சட்டப்பேரவையில் காரசார விவாதம்

அதேபோல், 419 கோடி கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: