• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • Rain Alert: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

 • Share this:
  தமிழகத்தில் மழை மற்றும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனரான புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  “உள் தமிழ்நாடு முதல் மன்னார் வளைகூடா வரை (1 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 9) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

  தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக
  ஜூலை 10 முதல் 12ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  Also Read:  கொள்ளையடிக்க பயன்படுத்தும் இந்த ஆப் உங்கள் மொபைலில் உள்ளதா?

  குறிப்பு: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும்.

  சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு எப்படி?

  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
  கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 13, ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 11, திருவையாறு (தஞ்சாவூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), நந்தியார் ஹெட் (திருச்சிராப்பள்ளி) தலா 6, கீரனுர் (புதுக்கோட்டை), மங்களபுரம் (நாமக்கல்), மன்னார்குடி (திருவாரூர்), கொடநாடு (நீலகிரி) தலா 5, வாழப்பாடி (சேலம்) 4, திருமானுர் (அரியலூர்), பெரிய நாயக்கன்பாளையம் (கோவை), கும்மிடிபூண்டி (திருவள்ளூர்) தலா 3, மேலாளத்துர் (வேலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 2, கடம்பூர் (தூத்துக்குடி), செட்டிகுளம் (பெரம்பலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), காரைக்குடி (சிவகங்கை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பவானிசாகர் (ஈரோடு), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), மோகனுர் (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 1 .

  Also Read:   திராட்சைகளின் ரோல்ஸ் ராய்ஸ்.. உலகின் மிக விலையுயர்ந்த சிவப்பு திராட்சை: ஒரு பழத்தின் விலை ரூ.35,000!

  மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  வங்க கடல் பகுதிகள்:

  09.07.2021 முதல் 12.07.2021 வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  10.07.2021 முதல் 12.07.2021 வரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  Also Read:   தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

  அரபிக்கடல் பகுதிகள்:

  09.07.2021 முதல் 12.07.2021 வரை :, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  09.07.2021 முதல் 12.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு
  அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: