• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்: இடைவெளியில்லாமல் நெருக்கியடித்தபடி பயணிக்கும் பொதுமக்கள்..

குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்: இடைவெளியில்லாமல் நெருக்கியடித்தபடி பயணிக்கும் பொதுமக்கள்..

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் பயணிக்கும் மக்கள்

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் பயணிக்கும் மக்கள்

திருப்பூரில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தின் படிகளில் நின்றபடி பயணிகள் பயணம் செய்தனர். 

  • Share this:
திருப்பூரில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தின் படிகளில் நின்றபடி பயணிகள் பயணம் செய்தனர். 

திருப்பூரில் இருந்து மாவட்டத்திற்குள் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக செல்லவேண்டிய சூழல் காரணமாக சமூக இடைவெளி இன்றி பேருந்துகளில் நின்றபடியும், படிகளில் நின்றும் நெருக்கியடித்தபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துகள் வந்து செல்லும் நேரம் தெரியாததும் ஒரு நாளைக்கு இருபது பேருந்துகள் வரை இயக்கப்பட்ட வழித்தடத்திலும் தற்போது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது போன்ற காரணங்களாலும் தற்போது கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் போக்குவரத்து துறையினர் வசூல் சரியாக இல்லை என பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கேள்வி கேட்பதால் இவர்கள் வசூலை எண்ணி பொதுமக்கள் அதிக அளவில் ஏறுவதையும் கண்டுகொள்ளாமல் பயணத்திற்கு அனுமதி அளிக்கின்றனர். இதன் காரணமாக சமூக இடைவெளி திருப்பூர் மாவட்டத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.

Also read... 200-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு...! சென்னை அப்டேட்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: