தூத்துக்குடியில் காதல் திருமணத்தை எதிர்த்து ஆணவக்கொலை: மணமகனின் தாய் மற்றும் நண்பர் கொலை..

தூத்துக்குடி அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் மணமகனின் தாய் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் காதல் திருமணத்தை எதிர்த்து ஆணவக்கொலை: மணமகனின் தாய் மற்றும் நண்பர் கொலை..
மாதிரிப்படம்
  • Share this:
தூத்துக்குடி அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் மணமகனின் தாய் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணின் மகன் விக்னேஸ்ராஜா அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.

இது தொடர்பாக லட்சுமணின் குடும்பத்திற்கும் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே பகை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு விக்னேஸ்ராஜா தனது நண்பர் அருண் என்பவருடன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று விக்னேஜ்ராஜாவிடம் தகராறு செய்ததோடு மட்டுமல்லாது அவரை வெட்ட தொடங்கியுள்ளனர்.அப்போது உடன் இருந்த நண்பர் அருண் தடுத்தபோது அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பிய விக்னேஸ்ராஜா தனது வீட்டிற்குள் சென்று உள்ளார். அப்போது வீட்டினை விட்டு வெளியே வந்த விக்னேஜ்ராஜாவின் தந்தை லட்சுமணன் மற்றும் அவரது தாயார் முத்துபேச்சி ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

Also read... பொய் வழக்கில் கைதுசெய்து காவலர்கள் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு... காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் மீது புகார்இந்த தாக்குதலில் முத்துபேச்சி சம்பவ இடத்திலேயும், நண்பர் அருண் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த லட்சுமணன் மற்றும் விக்னேஸ்ராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக விக்னேஜ்ராஜாவின் மனைவியின் சகோதரர் முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சலம், சுடர் ஆகிய 3 பேரையும் ஏரல் போலீசார் தேடி வருகின்றனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading