கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திருப்பியவர்கள் ஒரு லட்சம் பேர் - அமைச்சர் பாண்டியராஜன்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிற மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் சென்னை திரும்பியுள்ளனர் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திருப்பியவர்கள் ஒரு லட்சம் பேர் - அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
  • News18
  • Last Updated: August 19, 2020, 3:55 PM IST
  • Share this:
சென்னை காசிமேடு துறைமுகம் பகுதி மக்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் துறைமுகம் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார் பேட்டையில் 5 சதவீத்திற்கு கீழ் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில்  பூஜ்ஜியம் என்ற நிலைவர பணி செய்து வருகிறோம் என்ற அவர் காசிமேட்டில் சில்லறை மீன் விற்பனைக்கு மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து தென் மாவட்ட அமைச்சர்கள் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


கொரோனா காலத்தில் அரசு தனது சக்தியை மீறி செலவு செய்துள்ளது. வருவாய் 25% குறைந்தபோதிலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்து கொரோனா போரை அரசு எதிர்கொண்டுவருகிறது. இந்த சூழலில் இரண்டாம் தலைநகர் குறித்த அறிவிப்புக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும்  இது குறித்து முதல்லமைச்சர் பழனிச்சாமி ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார் என்றார்.

தடையை மீறி விநாயகர்  சிலைகள் வைக்கப்பட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.  ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகை குறித்து தலைமைச் செயலாளர் மதத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவை முதல்வர் அறிவிப்பார் எனவும் அவர் குறிபிட்டார்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மற்ற மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை திரும்பியுள்ள நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக காண்காணித்து வருகிறோம எனவும் தெரிவித்தார்
First published: August 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading