• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யானை வழித்தடங்களை மீட்க சென்னையில் கஜ யாத்திரை!

யானை வழித்தடங்களை மீட்க சென்னையில் கஜ யாத்திரை!

யானை (கோப்புப் படம்)

யானை (கோப்புப் படம்)

கர்நாடகா, கேரளா மாநிலங்களில், வனப்பகுதியையொட்டி இருந்த மக்களுக்கு, மாற்று இடத்தில் வீடு கட்டிக்கொடுத்து, யானைகளின் வலசை பாதைகளை மீட்டதாகவும் அவர்கள் கூறினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    யானை வழித்தடங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கஜயாத்திரை சென்னையில் நிறைவுபெற்றது.

    காடுகளில் வாழும் வனவிலங்குகளில் முக்கிய அங்கம் வகிப்பவை யானைகள். அத்தகைய யானைகளின் வழித்தடங்கள் இன்று நம் கண்முன்னே அழிக்கப்பட்டு வருகின்றன.

    மனிதர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி, யானைகளின் பெரும்பாலான வலசை பாதைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி வரும்போது, யானைகள் மனிதர்களை தாக்குவது தொடர்கதையாகி உள்ளது.

    இந்தநிலையில், யானைகளின் வழித்தடங்களை மீட்கும் முயற்சியாக, இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளை சார்பில் கடந்த மாதம் இரண்டாம் தேதி, தமிழகத்தில் கஜயாத்திரை தொடங்கியது.

    கோவை, நீலகிரி, சத்தியமங்கலம், ஆனைமலை, ஓசூர் என யானைகள் வாழும் பகுதிகளுக்கு சென்ற இந்த அமைப்பினர், அங்குள்ள மக்களுக்கு யானை வழித்தடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஒரு மாதத்திற்கு பிறகு, கஜ யாத்திரை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நிறைவுற்றது. இந்தியா முழுவதும் பயணித்து, யானைகளை காக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் கூறினர்.

    மேலும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில், வனப்பகுதியையொட்டி இருந்த மக்களுக்கு, மாற்று இடத்தில் வீடு கட்டிக்கொடுத்து, யானைகளின் வலசை பாதைகளை மீட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து பேசிய ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன், வருங்காலத்தில் மக்கள் பங்களிப்புடன் யானைகள் காப்பாற்ற வேண்டும் என்றார். இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளையின் கஜ யாத்திரைக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: