கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

news18
Updated: June 13, 2018, 4:08 PM IST
கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
திமுக எம்.எல்.ஏ., பெரியகருப்பன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: June 13, 2018, 4:08 PM IST
கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டதா என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திருபத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன், தனது உரையை தொடங்குவதற்கு முன் திமுக தலைவர் கருணாநிதியை உற்சவமூர்த்தி என்று குறிப்பிட்டார். அதனை விமர்சித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், உற்சவமூர்த்தி என சொல்கிறாரே, கடவுள் மறுப்பு கொள்கையை திமுக கைவிட்டுவிட்டதாக என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பெரியகருப்பன், திமுக தலைவர் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர், கோவிலுக்கு செல்லாதவர் இருப்பினும் திமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் என்றும், சிறு தவறு கூட நடைபெறாமல் கவனித்து கொண்டவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கையை பின்பற்றாமல் இருக்கிறீர்கள் என்றார். ஸ்டாலினிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை, மக்களுக்கு இளைஞர்களுக்கு இன்றளவும் நினைவில் இருக்க காரணமானவர் எம்.ஜி.ஆர். என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், கடவுள் நம்பிக்கை குறித்து பராசக்தி படத்திலேயே கருணாநிதி சொல்லி உள்ளார். கோவில் இருக்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...