‘தலைவி’ படத்தில் திமுக எங்களுக்கு கொடுத்த தொல்லைகளை காட்டவில்லை - ஜெயக்குமார்

தலைவி படத்தில் திமுக எங்களுக்கு கொடுத்த தொல்லைகளை காட்டவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைவி படத்தில் திமுக எங்களுக்கு கொடுத்த தொல்லைகளை காட்டவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தப்படம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  இந்நிலையில் இப்படத்தில் சொல்லப்படும் சில விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, புரட்சித் தலைவரை பொறுத்தவரை அவர் எப்போதுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டது கிடையாது.

  1967ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் குண்டடிப் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை போஸ்டரில் அச்சடித்ததன் மூலம் அண்ணா தலைமையிலான திமுக மாபெரும் வெற்றி பெற்ற ஆட்சியில் அமர்ந்தது.

  Also read: திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. காவல் துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..

  எம்.ஜி.ஆரால் கிடைத்த வெற்றி என்பதால் அவருக்கு ஏதேனும் ஒரு அமைச்சர் பதவி கொடுப்பதற்காக பேரறிஞர் அண்ணா அவரை அணுகியபோது எம்.ஜி.ஆர் அதனை மறுத்துவிட்டார். ஆனால் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் தனக்கு அமைச்சர் பதவி கேட்டது போலவும் அதற்கு கருணாநிதி மறுப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை அல்ல.

  அதே போல எம்.ஜி.ஆர் என்றைக்குமே ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியதில்லை. ஆனால் திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும், படத்தில் எங்கள் கட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: