முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு: 155 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு: 155 பேர் உயிரிழப்பு

கொரோனா - கோப்புப் படம்

கொரோனா - கோப்புப் படம்

தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 756 பேருக்கும், சென்னையில் 372 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், நாமக்கலில் 257 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 24,49,577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 9,046 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரையில், 23,67,831 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனையில் 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 155 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 31,901 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 756 பேருக்கும், சென்னையில் 372 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், நாமக்கலில் 257 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus, COVID-19 Second Wave