ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்

தடுப்பூசி செலுத்துவதில் முன்களப்பணியாளர்களுக்கு அடுத்த படியாக முதியவர்களுக்கே நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்பட்டது. பத்து மாதங்கள் ஆகியும் இன்னும் 50% பேர் கூட தமிழ்நாட்டில் முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு எட்டவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • 2 minute read
 • Last Updated :

  ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வேகமாக பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் வேளையில் தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இன்னமும் சுணக்கம் நிலவுகிறது.

  தடுப்பூசி செலுத்துவதில் முன்களப்பணியாளர்களுக்கு அடுத்த படியாக முதியவர்களுக்கே நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்பட்டது.  பத்து மாதங்கள் ஆகியும் இன்னும் 50% பேர் கூட தமிழ்நாட்டில் முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு எட்டவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.

  தமிழ்நாட்டில் சராசரியாக 84.42% பேர் முதல் டோஸ் மற்றும் 55.01% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் மாநில சராசரியை விட குறைவாகவே செலுத்தியுள்ளனர்.

  மாநிலத்தில் 1,04,19,000 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் 61,53,206 பேர் அதாவது 59% முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். மேலும் 43,56,126 பேர் அதாவது 42% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி முழு பாதுகாப்பை எட்டியுள்ளனர்.

  Also read... மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்

  மொத்த மக்கள் தொகை-57891000 இதில் முதல் டோஸ் - 48873395- (84.42%) இரண்டாவது டோஸ் - 31847624(55.01%). மேலும் 60 வயதுக்கு மேல் மக்கள் தொகை - 1,04,19,000 இதில் முதல் டோஸ் - 61,53,206 (59%) இரண்டாவது டோஸ் - 43, 56,126 (42%) செலுத்தியுள்ளார்.

  கடந்த இரண்டு அலைகளிலும் கொரோனாவின் தீவிர தாக்கத்துக்கு அதிகம் ஆளாகியிருப்பது முதியவர்கள் தான்.  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை தமிழ்நாட்டில் 34,878 பேர் கொரோனாவால் உயிரிழ்ந்திருந்தனர். இதில் 58% இறப்புகள் அதாவது 20,067 இறப்புகள், 60 வயதுக்கு மேற்பட்ட வயது பிரிவில் நிகழ்ந்தன.

  41 முதல் 60 வயதில் 35%இறப்புகளும் 21 முதல் 40 வயதில் 7% இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.

  ஆகஸ்ட் மாதம் வரை இறப்புகள்: மொத்தம் - 34, 878 இதில் 60 வயதுக்கு மேல் - 20,067 (58%). ஒமைக்ரான் பரவும் இந்நேரத்தில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகிறது என பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவிக்கிறார்.

  Also read... கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவிற்கு கிராம மக்கள் அஞ்சலி!

  "தமிழ்நாட்டில் சராசரியாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தியிருக்கும் எண்ணிக்கையை விட முதியவர்கள் குறைந்த சதவீதத்திலேயே தடுப்பூசி செலுத்தியுளளனர்.வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரானால் பலருக்கு ஒரே நேரத்தில் தொற்று ஏற்பட்டால் தீவிர பாதிப்பும் அதிகமானோருக்கு ஏற்படும்" என்கிறார்.

  முதியவர்கள் வெளியில் செல்லாததால் அவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்ற எண்ணம் தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

  இந்த எண்ணத்தை தவிர்க்க வேண்டும், தடுப்பூசி செலுத்தி தான் கொரோனா மரணங்களை நம்மால் தடுக்க முடிந்தது என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

  தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் கையில் இருக்கும் ஆயுதம் என்பதால் அதை தாமதிக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

  தடுப்பூசி செலுத்த போதிய விழிப்புணர்வு மற்றும வசதிகள் ஏற்ப்டுத்தியும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது சமூக பிரச்னையாக பார்க்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

  First published: