முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால் பழைய விலை மது பானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Last Updated :

    தமிழகத்தில் மதுபானங்களின் விலையை ரூ.50 வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த மதுக்கடைகள் தற்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும் இன்னும் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குறிப்பிட்ட அளவு விற்பனை குறைந்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதை தவிர்க்க, மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Also read: புதுக்கோட்டை: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி - வெறிச்சோடிய டாஸ்மாக்

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் குவார்ட்டர் விலையில் ₹10, ஆஃப் ₹20, ஃபுல் ₹40, பீர் விலை ₹10 வீதம் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. அது போல தற்போதும் உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளனர். குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர்ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபானங்களின் விலை உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். இதற்கிடையே குடோன்களில் தேங்கியுள்ள மதுபானங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால் பழைய விலை மது பானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    top videos

      இதன் காரணமாக, குறைந்த விலை மதுபானங்கள் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் விற்று தீர்ந்துவிட்டன. 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்களை கட்டாயமாக விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

      First published: