பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு வாபஸ்...!

பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு வாபஸ்...!

கமல்ஹாசன்

தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அக்கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யதுக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில், பேட்டரி டார்ச் லைட் சின்னம் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அச்சின்னத்தை ஒதுக்க கோரி தாக்கல் செய்த வழக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி திரும்பப் பெற்றது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வர இருக்கும் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அக்கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... தேர்தல் அறிவிப்புக்கு முன்  பிரச்சாரத்தின் செலவுகள் கணக்கில் வராது - தேர்தல் ஆணையம்!

இதற்கிடையில், தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அக்கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யதுக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், சின்னம் ஒதுக்க கோரி மக்கள் நீதி மய்யம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டார்ச் லைட் சின்னம் கிடைத்து விட்டதால் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: