தமிழகத்தில் இன்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும்

கோயம்பேடு மார்க்கெட் - கோப்புப்,படம்

தமிழகத்தில் இன்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட சிலவற்றிக்கு மட்டுமே இந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் என அனைத்தும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  மேலும் மக்களுக்கு வீட்டுக்கே காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மக்கள் சிரமத்தை குறைக்க நேற்றும், இன்றும் அத்தியாவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேப்போன்று மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரஉள்ளதால் மக்கள் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதுகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் இன்று இரவு 9 மணி வரை இருக்கும் என்பதால் மக்கள் மூகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு வலியுறுத்தி உள்ளது.
  Published by:Vijay R
  First published: