ஈஷா மையத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போட்டிக்கு போட்டியாக தஞ்சையில் நடைபெற்ற போராட்டங்கள்!

ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம்!

ஈஷா மையம் என்பது மக்கள் சொத்தாக தான் உள்ளது. ஈஷா மையம் மூலமாக ஏராளமான மரங்கள் நடப்பட்டு உள்ளதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஈஷா மையத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போட்டிக்கு போட்டியாக தஞ்சையில் போராட்டங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும், ஜக்கி வாசுதேவ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் தமிழ் முறைப்படி பூசைகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெய்வ தமிழ் பேரவை சார்பாக இன்று காலை தஞ்சை பனகல் கட்டிடம் அருகே ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை ரயில் நிலையத்தில் அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ஈஷா மையம் என்பது மக்கள் சொத்தாக தான் உள்ளது. ஈஷா மையம் மூலமாக ஏராளமான மரங்கள் நடப்பட்டு உள்ளதாகவும், அதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் தொடங்கி வைத்தார்.

Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

மேலும் ஏராளமான மக்கள் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ் அர்ச்சனை என்பது பண்டைய காலம் முதல் நடைபெற்று வருகிறது. இவர்கள் எதுவும் புதிதாக செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published: