Tamil Nadu Assembly Election 2021: வாக்குச்சாவடியில் தூய்மை பணியாளர் திடீரென மயக்கம் - பரபரப்பு!

Tamil Nadu Assembly Election 2021: வாக்குச்சாவடியில் தூய்மை பணியாளர் திடீரென மயக்கம் - பரபரப்பு!

முன்கள பெண் பணியாளர் மயக்கம்

வாக்குப்பதிவு மையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முன்கள பணியாளராகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிவகங்கையில் வாக்குச்சாவடியில் முன்கள பெண் பணியாளர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் 108 ஆம்புலண்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    சிவகங்கை மருதுபாண்டியர் அரசு பள்ளியில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த வாக்குப்பதிவு மையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முன்கள பணியாளராகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதில் பெண் ஊழியராக நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மல்லிகா என்கிற பணியாளர் வாக்குப்பதிவு மையத்திற்குள்ளாக பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார்.

    Also read... TN Assembly Election 2021: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த கருவியில் கோளாறு - 30 நிமிடங்கள் தாமதமாக வாக்களித்தார்!

    இதனை தொடர்ந்து அங்கிருந்த பிற பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். வாக்குப்பதிவு மையத்தில் முன்கள பெண் பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: