• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவர்

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவர்

Youtube Video

சேலம் மாவட்டத்தில் மனைவியின் காதலனை வர வைத்து, திட்டமிட்டு கணவரும் அவரது நண்பரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

  • Share this:
    சேலம் மாவட்டம் பனைமடல் அருகே உள்ள கணேசபுரம் கணவாய்க்காடு பாலத்திற்கு அடியில் இரும்புக் கம்பிகளால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் கிடப்பதாக ஏத்தாப்பூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது

    போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். அதில், சடலமாகக் கிடந்தவர், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 32 வயதான சதாசிவம் என்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், 28 வயதான பவித்ரா என்பவர் ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது கணவர் ரஞ்சித் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ஜேசிபி ஓட்டுநரான சதாசிவத்திற்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    தனது கிராமமான வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரஞ்சித்தின் மனைவி பவித்ரா உடன் அவருக்கு 4 ஆண்டுகளாகக் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    ரஞ்சித்தும் அவரது குடும்பத்தினரும் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் காதல் தொடர்ந்துள்ளது. ஆத்திரமடைந்த ரஞ்சித், சதாசிவத்தைக் கொலை செய்ய நண்பர் குமாருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

    Also read... வேலூரில் மாணவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம்

    அதன்படி மனைவி பவித்ராவிடம், சதாசிவத்தை வீட்டிற்கு வரவழைக்கும்படி மிரட்டியுள்ளார் ரஞ்சித். சதாசிவத்தைத் தாக்க கட்டை, அரிவாள், கை, கால்களைக் கட்டி வீச இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருந்தார் ரஞ்சித்.

    பவித்ராவும் சதாசிவத்தை ஞாயிறன்று இரவு வீட்டிற்கு வரும்படி அழைக்கவே சதாசிவம் ஆசையுடன் சென்றுள்ளார். அங்கு பதுங்கியிருந்த ரஞ்சித்தும் அவரது நண்பர் குமாரும் திடீரென அறைக்குள் நுழைந்து கட்டையாலும் அரிவாளாலும் சரமாரியாகத் தாக்கி வெட்டியுள்ளனர்.

    சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சதாசிவத்தின் கை, கால்களை இரும்புக் கம்பிகளால் கட்டியுள்ளனர். பின்னர் அவரது கை, கால்களுக்கு இடையே மரத்தைக் கட்டி ஆட்டைத் தூக்கிச் செல்வது போல் ரஞ்சித்தும் அவரது நண்பரும் தூக்கிச் சென்று பாலத்தின் அடியில் போட்டு விட்டு வந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: