கார்டூன் படங்களுடன் தயார் நிலையில் குழந்தைகள் கொரோனா வார்டுகள்

குழந்தைகள் கொரோனா வார்டு

புதுச்சேரியில் குழந்தைகள் அச்சமின்றி சிகிச்சை பெற கார்டூன் பொம்மைகளுடன்  கொரோனா வார்டுகள் தயாராகியுள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 85 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், ஏனாமில் 8 பேரும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 112 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. தற்போது மாநிலத்தில் 961 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 1,17,193 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,19,935 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூன்றாவது அலை இன்னும் ஏற்படவில்லை.ஏற்பட்டால் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் கார்டூன் பொம்மைகள், குழந்தைகளை கவரும் விலங்குகளை வரைந்து கொரோனா அரசு  மருத்துவமனையில் குழந்தைகளின் பயத்தை போக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் தயாராகி வருகின்றன.

புதுச்சேரியில் கொரோனாவுக்காக சிறப்பு மருத்துவமனையாக இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாவது அலையின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் முழு வீச்சுடன் பணியாற்றினர். கொரோனாவுக்காக சிலர் உயிரையும் இழந்து சேவையாற்றி வருகின்றனர்.தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே கொரோனா குழந்தைகள் வார்டுகளை தயார் செய்து வருகின்றனர். இவ்வார்டுகளில் பயமின்றி குழந்தைகளை மகிழ்வூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி சுகாதாரத்துறையுடன், கேர்மேக்ஸ் அறக்கட்டளை மற்றும் பெயின்ட் பாண்டிச்சேரி அமைப்புகள் உடன் இணைந்து வார்டுகளை புத்துயிரூட்டி வருகின்றனர்.
நூறு படுக்கை வசதிகளுடன் இரு வார்டுகள் தற்போது தயாராகி வருகிறது. அனைத்து பணிகளும் இவ்வாரத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.வார்டினுள் நுழைந்தவுடன் சுவரெங்கும் கார்டூன் பாத்திரங்கள், குழந்தைகளை கவரும் விலங்கு பொம்மைகள், விளையாட்டுகள் என வரிசையாக வண்ணம் தீட்டி வரையப்பட்டுள்ளன.

குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் சூழலை உருவாக்க அவர்கள் மனதினுள் நினைக்கும் கார்டூன் சித்திரங்கள் சுவரெங்கும் விரிந்துள்ளன.முக்கியமாக குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படும் குழாய்கள் அனைத்தும் செடிகளின் வண்ணத்தில் பசுமை பூத்து, இலைகள் வரையப்பட்டு பயமுறுத்தா வகையில் உருவாகி வருகின்றன.இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "நூறு படுக்கைகள் கொண்ட இருகுழந்தைகள் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டு முழுக்க குழந்தைகளின் மனதில் நம்பிக்கையூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

Photos : லெஹங்கா டூ பேஷன் அவுட் ஃபிட் .. ஆல் ரவுண்டர் ஷில்பா ஷெட்டியின் போட்டோஸ்

முன் எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும்புதுச்சேரியில் கொரோனா நோய் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.குழந்தைகள் பாதிப்பும் குறைந்து விட்டது.இருப்பினும் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு துரிதமாக எடுத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: