வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்... எமன் வேடம் அணிந்து திருநங்கைகள் விழிப்புணர்வு..!

எமன் வேடம் அணிந்த திருநங்கைகள்

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்னால் வைரஸ் வேடமணிந்தவர்கள் தொற்றிக் கொண்டு கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பது போலவும் நடித்தனர்.

  • Share this:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருநங்கைகள், எமர்தர்மன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் 144 தடை உத்தரவை மீறி வெளியில் வரும் பொதுமக்களுக்கு போலீசார் வருவாய்த்துறை இன்னும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை சார்பில் கோவை ரோடு காந்தி சிலை அருகில் திருநங்கைகள் எமதர்மன் மற்றும் கொரோனா வைரஸ் போல் வேடமணிந்து கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

அப்போது எமதர்மன் வேடமணிந்த திருநங்கை கொரோனா தாக்கம் குறித்தும், பொதுமக்கள் தனித்து, விழித்து, வீட்டில் இருக்கும் படியும் வெளியில் வருவதை தவிர்க்க வலியுறுத்தியும், பொதுமக்கள் வெளியில் வந்தால் கொரோனா தொற்றிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்னால் வைரஸ் வேடமணிந்தவர்கள் தொற்றிக் கொண்டு கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பது போலவும் நடித்தனர்.

மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருநங்கைகள் நிகழ்த்திய இந்த விழிப்புணர்வு நாடகம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...

 
Published by:Vinothini Aandisamy
First published: