• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • #News18SuperExclusive | அதிகாரிகள் துணையுடன் வறண்ட ஆறுகளை குறிவைத்து மணல்கடத்தல்!

#News18SuperExclusive | அதிகாரிகள் துணையுடன் வறண்ட ஆறுகளை குறிவைத்து மணல்கடத்தல்!

மணல் கொள்ளை நடைபெற்ற இடம்

மணல் கொள்ளை நடைபெற்ற இடம்

மணல் கொள்ளையை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாமக்கல்லில், வறட்சியால் காணாமல் போன ஆறுகளைத் குறிவைத்து, அரசு அதிகாரிகள் துணையுடன், பல கோடி ரூபாய் மதிப்பில் மணல் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

    இயற்கை வளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மணல் வளம். அத்தகைய ஆற்றுமணலை, நாமக்கல்லில், அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் பிரமுகர்கள் கடத்திவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் புதுசத்திரம் மற்றும் கதிராநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றுமணல் கொள்ளை அரங்கேறி வருகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை, போதமலையில் உருவான ஆறு இந்த பகுதியில் பாய்ந்து சென்றுள்ளது. ஆனால் காலப்போக்கில் வறட்சி காரணமாக இந்த ஆறு காணாமல் போனது.

    தற்போது இங்கு மணல்கொள்ளை சம்பவங்கள் தொடர்கதை ஆகியிருக்கின்றன. அரசு அதிகாரிகளின் துணையுடன், அறுபது அடி ஆழம் வரை தோண்டி, சட்டவிரோதமாக மணல் எடுத்துவருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு யூனிட் மணல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டு வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 500 யூனிட் வரை மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதேபோல், வேலம்பாளையம் அருகே அண்ணமார் ஏரி பகுதியிலும் மணல் கொள்ளை நடைபெறுகிறது.

    புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி பகுதிகளில், ஆறுபாய்ந்த வழித்தடங்களை சில அரசு அதிகாரிகளின் துணையோடு கண்டறிந்த அரசியல் பிரமுகர்கள்,   அங்கிருந்து மணலை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    மணல் திட்டுகள் வெளியே தெரியத்தொடங்கியதை அடுத்து, பொதுமக்கள் சந்தேகத்தின் பெயரில் டிப்பர் லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் ஆற்றுமணல் இருப்பது தெரியவந்தது. இதேபோல் இப்பகுதி முழுவதும் எவ்வித தடையுமின்றி மணல் கடத்தல் நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் மணலை தோண்டி எடுத்ததற்கான ஆதாரமும், அதனை டிப்பர் லாரி மூலம் கடத்திச்சென்றதற்கான தடமும் பதிவாகி இருக்கிறது.

    தமிழகத்தின் மணல்வளத்தை காப்பாற்ற, அரசு உடனடியாக இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: