• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோழித் தீவனங்களின் விலை உயர்வு எதிரொலி: நாமக்கலில் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு

கோழித் தீவனங்களின் விலை உயர்வு எதிரொலி: நாமக்கலில் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு

கோழித் தீவனங்களின் விலை உயர்வு எதிரொலி: நாமக்கலில் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு

கோழித் தீவனங்களின் விலை உயர்வு எதிரொலி: நாமக்கலில் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு

கோழித் தீவனங்களின் விலை உயர்வு எதிரொலி, நாமக்கலில் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  • Share this:
    தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முதல் இடம் வகிக்கிறது. இங்கு சிறிய மற்றும் பெரிய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. முட்டைக்கோழி, கறிக்கோழி என இரு வகைகளில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    குறிப்பாக இந்த மண்டலத்தில் மட்டும் ஒன்றரை கோடி கோழிகள் இறைச்சிக்காக மட்டும் வளர்க்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகள் சென்னை, கோவை உட்பட தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    Also read: சென்னையில் வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி... முன்பதிவு செய்வது எப்படி?

    நாமக்கலில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் பெரும்பாலும் சத்துணவுத் திட்டத்திற்காகவே அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக முட்டை விலை குறைந்ததுடன், ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை விலை 80 முதல் 90 ரூபாய் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது, பெரிய அளவில் கறிக்கோழி வர்த்தகம் நடைபெறாத நிலையில், 25 ஆயிரம் கிலோ விற்பனையான கடைகளில், வெறும் 10 ஆயிரம் கிலோ மட்டுமே விற்பனையாவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். 


    மேலும், பண்ணைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் விலை, கோழித் தீவன விலை உயர்வு போன்ற காரணங்களில் கறிக்கோழி விலை அதிகரித்துள்ளதாகவும் கோழி இறைச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனார். அதேவேளையில், கோழித் தீவன இறக்குமதி அதிகரிக்கும் போது விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தோல் நீக்கப்பட்ட கறிக்கோழி விலை ஒரு கிலோவுக்கு 90 ரூபாய் வரை உயர்ந்து, தற்போது 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் முடங்கியிருந்த கறிக்கோழி வர்த்தகம் மெல்ல சூடு பிடிக்கும் நிலையில், தீவின விலைவாசி காரணமாக மீண்டும் விலை உயர்வதால் தொழில் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: