நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என தகவல்

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் மார்ச் இறுதி வாரத்தில் இருந்து வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

  ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 09 முதல் 11 வரை குமரிக்கடல் பகுதியில் ( 1 கிலோமீட்டர் உயரம் வரை) உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  Must Read : தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு

   

  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: