நாமக்கலில் சாலையில் சென்றவர்களின் வாய், காதுகளை கடித்து குதறிய கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்

Youtube Video

நாமக்கல் மாவட்டத்தில், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சாலையில் சென்றவர்களை கடித்து குதறியுள்ளார். பொதுமக்கள் அவரைப் பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் காளப்ப நாயக்கன்பட்டி ரெட்டி காலனியைச் சேர்ந்தவர் 20 வயதான கண்ணன். லாரி கிளீனராகவும் பெயின்டராகவும் வேலை பார்த்து வந்த கண்ணன், நாளடைவில் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார்.

  தாய் இறந்து விட்ட நிலையில், தந்தை சண்முகத்தை அடித்து விரட்டி விட்டு பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களாக அவரது மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சாலையில் செல்பவர்களை மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில், சாலையில் சென்ற பெண்களை மிரட்டியுள்ளார்.

  அதைக் கண்டித்து அறிவுரை கூறியவர்களை சரமாரியாக அடித்து அவர்களின் வாய், காது, கழுத்து போன்ற இடங்களில் ரத்தம் வரும் அளவுக்கு கடித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பல் மருத்துவரின் காரை மறித்து அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு மிரட்டினார்

  கண்ணனை மருத்துவர் கண்டித்தபோது அவரது வாயைக் கடித்துக் குதறியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு அவரைப் பிடித்து அடித்து கைகளைக் கட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

  மேலும் படிக்க...திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு நிகரான ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்

  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். கண்ணனால் கடிபட்டு காயமடைந்த 5 நபர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  வீடியோ

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: