அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா - ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்!
அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா - ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்!
மயிலாடுதுறையில் ஒட்ட்ப்பட்டுள்ள போஸ்டர்
கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை பின்வாங்கல் குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
மயிலாடுதுறையில், ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை பின்வாங்கல் குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் மயிலாடுதுறை நகர்புறங்களில் பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா..." - உண்மை விவசாய பெருங்குடி மக்கள் மயிலாடுதுறை என குறிப்பிடப்பட்டு ரஜினிகாந்தின் புகைப்படத்துடன் போஸ்டர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.