மதுரையில் கூடுதல் தொற்றுக்கு யார் காரணம் என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. சென்னைக்கு நிகரான சிகிச்சை வசதியை மதுரையில் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
மதுரை ஒத்தக்கடை கொரோனா தனிமை மையத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர் சந்தித்தபோது,”மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் பேர் வசிக்கின்றனர். 1477 பேருக்கு தொற்று ஏற்பட்டு 553 பேர் குணமாகியுள்ளனர். இது தான் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இறந்தவர்கள் பிற நோய்களால் இறந்துள்ளதாக அவர்களது உடல்நல வரலாறு சொல்கிறது. 1400 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு வீடாக நோய் தொற்றை கண்டறியும் பணி மதுரையில் நடந்து வருகிறது.
கொரோனா தனிமை முகாமிற்கு வருபவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று இருப்பவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் பார்க்கவும்:-
கொரோனா மரணங்கள்: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் உயிரிழந்தவர்கள் 14.5% பேருக்கு இணை நோய்கள் இல்லை
கடிதம் மூலமாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதை சு.வெங்கடேசன் எம்.பி., நிறுத்தி கொள்ள வேண்டும். என்னனென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒருமுறையாவது நேரில் வந்து அவர் ஆய்வு செய்ய வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.