₹500 பணம், ஆதார் எண் கொடுத்தால் அரை மணி நேரத்தில் ஒரிஜினல் இ பாஸ்... கடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ் அப் ஆடியோ!

₹500 பணம், ஆதார் எண் கொடுத்தால் அரை மணி நேரத்தில் ஒரிஜினல் இ பாஸ்... கடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ் அப் ஆடியோ!
கோப்புப்படம்
  • Share this:
கடலூரில் ஆதார் கார்டு கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ பாஸ் எடுத்து தருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் தெரிவித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரை 50,000 இபாஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இறப்பு, திருமணம் மற்றும் மருத்துவ பணிகளுக்கு மட்டுமே இந்த இ-பாஸ் வழங்கப்படும் நிலையில் விண்ணப்பித்தால் கிடைப்பது என்பது சாதாரண வேலையல்ல.

பலர் பலமுறை முயற்சி செய்தும் கிடைக்காமல் அந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது கடலூரில் ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


அதாவது டிராவல்ஸ் நடத்தும் நம்மிடம் இ-பாஸ் தேவைப்படுபவர்கள் ஆதார் கார்டை மட்டும் அனுப்பினால் அரைமணி நேரத்தில் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படும் எனவும் இது போலி பாஸ் அல்ல உண்மையான பாஸ் எனக் கூறும் அவர் ஒவ்வொரு பாசுக்கும் 500 ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் இதுவரையில் 50,000 இ-பாஸ் எடுத்து கொடுத்துள்ளதாக அதிர்ச்சி ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

மேலும் இருக்கின்ற இந்த ஒரு மாதத்திற்கு தன்னை பயன்படுத்தி டிராவல்ஸ் ஓட்டுங்கள் எனக் கூறியிருக்கிறார். இந்த ஆடியோ தற்போது கடலூரில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி இ-பாஸ் கிடைக்கின்றது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also read... டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கைஇதற்கு விரிவான விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் இதில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிலையில் நாம் செய்தி வெளியிட்டதின்  அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சாகாமூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். புகாரின் பேரில் எஸ்பி உத்தரவின் அடிப்படையில் கடலூர் எஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் டிராவல்ஸ் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading