அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை  

அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை  

நோயால் பாதிக்கப்பட குழந்தையுடன் பெற்றோர்கள்

மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே குழந்தை இறப்பை தடுக்க முடியும் எனவும், அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எஸ்.எம்.ஏ எனப்படும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தையை குணப்படுத்த 16 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வருகின்றனர். 

கோவை போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியை சேர்ந்த தம்பதி அப்துல்லா - ஆயிஷா. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரின் 8 மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப் , எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பு எனவும், அதற்குள்  குழந்தையை காப்பாற்ற குழந்தையின் உடலில் மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படி மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே குழந்தை இறப்பை தடுக்க முடியும் எனவும், அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் எனவும், அமெரிக்காவில் இருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

8 மாத பெண் குழந்தையை காப்பாற்ற இந்த ஊசியை போட  வேண்டிய நிலையில், 16 கோடி ரூபாய் தொகையை எப்படி சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதிஉதவியை கேட்டு வரும் பெற்றோர் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு மருத்து கிடைக்க  உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குழந்தையை காப்பாற்ற அரசே இந்த மரபணு நோய்க்கான மருத்தை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் குழந்தையின்  பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதே பாதிப்புடைய ஒரு  குழந்தை மும்பையில் இந்த ஊசி போட்டபின்பு  தற்போது குணமடைந்து வருவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பெங்களூரை சேர்ந்த தன்னார்வ தொண்டு  நிறுவனத்தில் இதற்கான உதவி செய்வதாக கேள்விபட்டு பெயர் பதிவு செய்து நிதிக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்த பெற்றோர், அந்த தன்னார்வ நிறுவனம் வருடத்திற்கு 100 குழந்தை என்ற வகையில், குலுக்கல் முறையில் குழந்தைகளை தேர்வு செய்து நிதி வழங்கி வருவதால் உதவி கிடைக்குமா என தெரியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

Also read... ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது - நீதிமன்றம்!

குழந்தையை காப்பாற்ற நிதிக்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து காத்திருப்பதாகவும், அதே வேளையில் மத்திய, மாநில  அரசுகளே அமெரிக்காவில் இருந்து இந்த நோய்க்கான  மருந்தை கொள்முதல் செய்து கொடுத்து  குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர். ஏற்கனவே முதல் குழந்தை இதே பாதிப்பால் உயிரிழந்து விட்ட நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை காப்பாற்ற தம்பதியினர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குழந்தையை காப்பாற்ற வழி இருந்தும் அதற்கான  விலை எட்டமுடியாத உயரத்தில் இருப்பதால்   பெற்றோர் கலங்கிபோயிருக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: