பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காவலர் மீது மனைவி புகார்..

செல்வகுமார்

செல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை அம்பத்தூரில், ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக, காவலர் ஒருவர் மீது அவரது மனைவி புகாரளித்துள்ளார்.

  அம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா, தனது முதல் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு, எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான செல்வகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.

  Also read... தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..  இந்தநிலையில் அண்மையில் தனது இரண்டாவது கணவரின் செல்போனை பார்த்த அவர், அதில் பல பெண்களுடன் செல்வகுமார் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனைதொடர்ந்து அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சுமலதா புகார் மனு அளித்துள்ளார். மேலும் செல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்
  Published by:Vinothini Aandisamy
  First published: